Latestமலேசியா

செமிஞ்சேயில் அமைச்சர் சைட் சாதிக்கை  தாக்க முயற்சி! (Video)

செமிஞ்சே, பிப்.16-  செமிஞ்சே இடைத்தேர்தலின் வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர், அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மானை தாக்க முயற்சி நடந்ததாகவும்,  போலீசார் தலையிட்டு அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இன்று, சனிக்கிழமை காலை இடைத்தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், 11.05 மணியளவில் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரான சைட் சாதிக் தமது காரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது,இந்தச் சமபவம் நடந்தது.

தேசிய முன்னணியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் அடங்கிய கும்பல் ஒன்று,  தகாத வார்த்தைகளால் அவரைக் கடுமையாகத்  திட்டியதோடு, அவருக்கு அருகில் சென்று அராஜகமாக நடந்து கொண்டு, அவரைத்  தாக்கவும் முற்பட்டனர்.

அமைச்சரின் மெய்க்காப்பாளர்களும்  போலீஸ்காரர்களும் அந்தக் கும்பலைத் தடுத்து,   அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது சைட் சாதிக்கின் டுவிட்டர் அகப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்தில் சைட் உடல் ரீதியாகத் தாக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker