Latestமலேசியா

செமிஞ்சே வேட்பு மனுவின்போது தே.மு. ஆதரவாளர் மரணம்!

காஜாங், பிப். 16 – செமிஞ்சே இடைத்தேர்தலின் வேட்புமனுத் தாக்கலின்போது, தேசிய முன்னணி ஆதரவாளர் ஒருவர் மயக்கமுற்று, பின்னர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

காஜாங் ஊராட்சி மன்றத்தின் செளஜானா இம்பியானில் உள்ள ஶ்ரீசெம்பாக்கா அரங்கில் அந்த வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.

அதில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற 59 வயதான ஆதரவாளர், காலை 9.20 மணியளவில் கூட்டத்தில் மயக்கமுற்று விழுந்தார். அவரைத் சோதித்த தனியார் மருத்துவ உதவியாளார்கள், அவர் மரணமடைந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

சவப் பரிசோதனைக்காக அவரின் உடல் காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகக் காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் ட்ஸாபிர் முகமட் யூசோப் தெரிவித்ததோடு, அது திடீர் மரணம் என வகைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker