Latestமலேசியா

3ஆவது தங்கத்தையும் வென்று மீண்டும் அசத்தினார் ஶ்ரீ அபிராமி!

அபுதாபி,பிப்.16- அபுதாபியில் நடைபெற்ற  4-ஆவது மத்தியக் கிழக்கு பனிச்சறுக்கு போட்டியில் ஶ்ரீ அபிராமி, மூன்றாவதாக தங்கப் பதக்கத்தை வாகை சூடி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஷாயிட் ஸ்போர்ட்ஸ் அரங்கில் நடைபெற்ற பிரி ஸ்டைல் மற்றும் ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆகிய போட்டிகளில் ஏற்கெனவே ஶ்ரீ அபிராமி  இரண்டு தங்கப் பதகங்களை வென்றுள்ளார் எனப்து குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், நேற்றிரவு 9.45 மணியளவில் நடைபெற்ற “Solo Comp Freestyle” பிரிவிலும் ஶ்ரீ அபிராமி  ஒரு தங்கப் பதக்கத்தை வாகை சூடினார்.

அனைத்துலக பனிச் சறுக்குப் போட்டிகளில் ஏற்கெனவே பதக்கங்களைக் குவித்துள்ள அவர், அபுதாபியில் மேலும் இரு போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். இந்தப் போட்டிகளிலும் ஶ்ரீஅபிராமி தங்கம் வெல்லும் வாய்ப்புகள் பிரகசமாகவுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker