Latestஇந்தியா

சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தனிக் கட்சி -ரஜினி அறிவிப்பு!

சென்னை, பிப்.18- கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று அரசியலில் குதிக்கப் போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது வரை தொடங்கவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனிக்கட்சி தொடங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தல் நமது இலக்கு அல்ல. 201-7இல் அரசியல் அறிவிப்பை வெளியிடும் போதே சட்டமன்ற தேர்தல் தான் நமக்கு இலக்கு என்பதை தெளிவாக கூறியிருந்தேன்.

நமது இயக்கம் வித்தியாசமானது. நிர்வாகிகள் யாரும் பணம்- பதவியை என எதிர்பார்த்து இருக்கக்கூடாது. அப்படி எதிர்பார்ப்பவர்கள் யாராவது இருந்தால் இங்கிருந்து வெளியேறி விடலாம் என தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக – காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவும். நாம் சட்டமன்ற தேர்தலை மட்டும் எதிர்கொள்வோம். அதில் நமது பலத்தை நிரூபிப்போம். நமக்கு சாதகமான அலை வீசும். மகான்கள் ஆசி, கடவுள் ஆசி, மக்கள் ஆசி நமக்கு இருக்கிறது என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker