Latestமலேசியா

ஜாசின் தேர்தல் மனு; மறு விசாரணைக்கு உத்தரவு

கோலாலம்பூர், பிப்.18- கடந்த 14-ஆவது பொதுத் தேர்தலில், ஜாசின் நாடாளுமன்ற தொகுதி பிகேஆர் வேட்பாளராக போட்டியிட்ட கைருடின் அபு ஹசான் தொடுத்த தேர்தல் மனு மறு விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கைருடினால் தொடுக்கப் பட்ட அந்த மனு, எந்த நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப் படலாம் என்ற அடிப்படையில், அந்த மனு தொடர்பில் மறு விசாரணை செய்யப் பட வேண்டும் என்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தலைவரான டான்ஸ்ரீ ரிச்சர்ட் மலான் ஜூம் தெரிவித்தார்.

தனது மனுவில் தேவையான அனைத்து விவரங்களையும் கைருடின் பதிவிட்டுள்ளார் என்றும் மலான் ஜூம் குறிப்பிட்டார். அந்த மனு தொடர்பிலான மறு விசாரணையை, புதிய நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும், உத்தரவிடப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker