Latestமலேசியா

மகாதீரை கவிழ்க்கச் சதியா? அபத்தமான கூற்று! – லிம் குவான் 

கோலாலம்பூர், பிப். 17-  பிரதமர் துன் மகாதீரை கவிழ்க்க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கூட்டணியில் சூழ்ச்சி நடப்பதாகப் பாஸ் கட்சி கூறியிருப்பது பெரும் அபத்தம் என ஜசெகவின் தலைமைச் செயலாளர்  லிம் குவான் எங் வர்ணித்துள்ளார்.

சூழ்ச்சி நடப்பதாக தெரிவித்திருக்கும் பாஸ் கட்சி தலைமைச் செயலாளர் தக்யுடின் ஹசானின் கூற்று, பொய்யானது, மட்ட ரகமான அபத்தம்,  ஆதாரமில்லாதது என லிம் குவான் வர்ணித்தார்.

மகாதீரின் தலைமைத்துவத்தின் மீது பக்காத்தான் கூட்டணி மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. அவரை ஏகமனதாக ஆதரிக்கிறது. அவரைக் கவிழ்க்க சூழ்ச்சி எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சதி நடப்பதற்கான ஆதாரத்தை  தக்யுடின் காட்ட வேண்டும், தவறினால் நேர்மை தவறியவர் எனப் பொருள்படும் என அவர் லிம் சொன்னார்.

இதனிடையே அது பற்றிக் குறிப்பிட்ட அன்வார் இப்ராஹிம், பக்காத்தான் கூட்டணி மகாதீரின் மீது முழு நம்பிக்கையை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

அவரைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும், அம்னோவிலிருந்து பாஸ் கட்சி பெற்ற  9 கோடி ரிங்கிட் விவகாரத்தை திசை திருப்பவே அது இந்தக் குற்றச்சாட்டை முன் வைப்பதாகவும்  அன்வார் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker