Latestமலேசியா

எஸ்பிஎம் தேர்வு: முன்கூட்டியே நடத்துவதில் பிரச்னையில்லை -சங்கம்

கோலாலம்பூர், பிப். 19 – இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வுகளை அக்டோபர் மாதத்திலிருந்து  நடத்துவதில் பிரச்சினை இல்லையென தேசிய  ஆசிரியர் தொழிலியல் சங்கம் (என்யுடிபி) அறிவித்துள்ளது.

வெள்ளப் பிரச்சினையினால் ஆண்டு இறுதியில் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதை நிவர்த்திக்க,  கல்வி அமைச்சு இத்திட்டத்தை அமல்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் ஆனால், அது சம்பந்தமான பரிந்துரைகள் கோரப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று தேர்வுகளைத் தகுந்த ஓய்வு கொடுத்து நடத்தினால்,  மாணவர்களுக்கு அது பெரும் சுமையாகவும் மன அழுத்தத்தையும் உருவாக்காது என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.

முதல் கட்ட சோதனைகள் அக்டோபர் 14 – 17 ஆம்தேதி வரையிலும், இரண்டாம் கட்ட சோதனைகள நவம்பர் 5-7, 13-14, 18-21 வரையிலும் மூன்றாம் கட்ட சோதனைகள் நவம்பர் 25 – 27 வரையிலும் நடத்தப்படுவதோடு வெள்ளிக்கிழமைகளில் சோதனை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker