Latestசினிமா

கொலை மிரட்டல்: பெற்றோருக்காக நடிகரை மன்னித்தேன்! -நடிகை அதிதி மேனன்

சென்னை, பிப்.19- ‘பட்டதாரி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி மேனன். இந்தப் படத்தில் இவர் நடித்த போது கதாநாயகனான நடிகர் அபி சரவணனை காதலித்தார்.
தன்னை திருமணம் செய்து கொண்டதாக போலி சான்றிதழ் தயாரித்து  தொந்தரவு கொடுத்து வருவதாக  நடிகை அதிதி மேனன் சென்னை போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன் நடிகை அதிதி மேனன், படப் பிடிப்பிற்காக வெளியூருக்கு சென்ற போது வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து கொண்டு தலைமறைவாகி விட்டார் அபி சரவணன் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது அதிதி மேனன் சென்னை பெருநகர காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அபி சரவணன் தன்னுடைய இமெயில் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்தை ஹேக் தன்னுடைய பாஸ்பேர்ட் மற்றும் பேன்-கார்டு ஆகியவற்றின் தகவல்களை திருடியதாகவும் தனக்கு படவாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் கொலை மிரட்டல் விடுத்தார். அவருடைய பெற்றோர்கள் மன்னிப்பு கேட்டதால் அவர் மீது புகார் அளிக்கவில்லை என்று அத்தி மேனன் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker