Latestமலேசியா

 குளுவாங் ஆற்றில் மிதந்த  பெண்ணின் சடலம்! கழுத்து நெறிக்கப்பட்டாரா? 

குளுவாங், பிப். 20 – கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்ட  பெண்ணொருவரின் சடலம் சுங்கை ரெங்கம், சுங்கை பாரிட் ஹாஜி ஹாஷிம் ஆற்றில் மிதந்தது கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் பொதுமக்கள் அளித்த புகாருக்குப் பின்னர்,  அச்சடலம் மீட்கப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அப்து இஸ்மயில்  தெரிவித்தார்.

பரிசோதனையில் அந்தப் பெண் 3 அல்லது 4 நாள்களுக்கு முன்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும்  சடலம் அழுகி இருந்ததால் அதன் வயது மற்றும் எந்த இனத்தைச் சேர்ந்தது என்பது  கண்டறிய முடிவில்லை.

மேலும், அந்தச் சடலத்தில் எந்தவொரு அடையாள ஆவணமும் காணப்படவில்லை. கழுத்தில் இறுக்கப்பட்ட துணியும் எரிக்கப்பட்ட பிளாஸ்டி ஒன்று    சடலத்தின்  நீல நிற ஜீன்ஸிலும்  பழுப்பு நிற பிளவுஸிலும் ஒட்டிக் கொண்டிருந்ததாக முகமட் அப்து தெரிவித்தார்.

காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் யாரும் இருந்தால், விசாரணை அதிகாரியான ஏஎஸ்பி கே.கார்த்திகைபாலன், 019-577 7221  என்ற தொலைபேசி எண்ணுடன் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker