Latest

செமினியில் பி.எஸ்.எம். நிலை மாற வேண்டும்! -அருட்செல்வம்

செமினி, பிப்.20- பி.எஸ்.எம் கட்சியானது என்றுமே தோல்வியை தழுவும் கட்சி என்று வர்ணிக்கப்பட்டு வரும் வேளையில், செமினி தொகுதியில் மார்சு 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில், அந்நிலைமை மாறும் என்று பி.எஸ்.எம் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பி.எஸ்.எம் கட்சி ஏழை மக்களுக்கு, குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு பல உதவிகளை வழங்கி வந்த போதிலும், அக்கட்சி எந்த தொகுதியிலும் இம்முறை வெற்றிப் பெறவில்லை.

அதற்கு காரணம் அரசியல் சூட்சமங்கள் தான் என்றும், மக்கள் தங்களை நிராகரிக்கவில்லை என்றும் பி.எஸ்.எம் கட்சி உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் கூறினார்.

“பி.எஸ்.எம் கட்சி வெற்றியடையாது என்று இதர அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. நாங்கள் ஒவ்வொரு முறையும் போட்டியிடும் போது, வாக்குகளை பிரிப்பதற்காக போட்டியிடுகிறோம் என்று அக்கட்சிகள் கூறுகின்றன. தோல்வியை மட்டுமே தழுவும் கட்சி என்று அவர்கள் எங்களை வர்ணிக்கின்றனர்.

“அவ்வாறு கூறப்படுவதில் உண்மையில்லை. கடந்த பொதுத் தேர்தலில் மட்டும் தான் செமினி தொகுதியில் பி.எஸ்.எம் கட்சி படுதோல்வியை கண்டது. அதற்கு முந்தைய இரு பொதுத் தேர்தல்களின் நாங்கள் அந்தத் தோல்வியை காணவில்லை.

“கடந்த பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கட்சிக்கு பெருமளவில் ஆதரவு திரும்பியதால், நாங்கள் அத்தோல்வியை சந்தித்தோம்” என்று அருள் செல்வன் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker