Latestசினிமா

நடிகை அதிதி மேனன் என் மனைவிதான்! -அபி சரவணன்

சென்னை. பிப்.20- நடிகை அதிதி மேனன் என் மனைவி தான். நானும் அவரும் மூன்று வருடங்களுக்கு மேலாக சேர்ந்து தான் வாழ்ந்தோம் என்று நடிகர் அபி சரவணன் கூரியுள்ளார்.

போலியான திருமண சான்றிதழை காட்டி மனைவி என உரிமை கொண்டாடி வரும்  நடிகர் அபி சரவணன் தன்னை மிரட்டுவதாக நடிகை அதிதி மேனன்நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

அவரை ஒரு காலத்தில் காதலித்தது உண்மை தான். ஆனால் அவரது குணம் பிடிக்காத காரணத்தினால் பிரிந்து சென்று விட்டேன் ஆனால் அவருக்கும் எனக்கும் திருமணம் ஆகி விட்டதாக கூறுவது பொய் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் அபி சரவணன் கூறியதாவது:  2016 ஜூன்  மாதம் பதிவு திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம். அவர் எனது மனைவி தான்.

நான் வீட்டில் இல்லாத போது வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார் என்று புகார் கூறியிருந்தார். திருமணம் ஆனதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
அவரை எனது மனைவியாக ஏற்க இப்போதும் தயாராக இருக்கிறேன். புகாரை சட்டப்படி சந்திப்பேன் என கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker