Latestசினிமா

‘அப்போ 100 ரூபாயோடு வந்தேன்: இப்போ BMW காரில் போறேன்!’ -பாடகர் வேல்முருகன்

சென்னை, பிப்.21- பிரபல திரைப்பட பாடகரான வேல்முருகன் வெறும் நூறு ரூபாயோடு தான் சென்னைக்கு வந்தேன். ஆனால் இன்று சொந்த வீடு, கார் என் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த கடவுள் வேல் முருகன் தான் என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது: என்னுடைய ஊர் விருத்தாச்சலம் பக்கத்தில் இருக்கும் முதனை கிராமம். அப்பாவின் பெயர் தனசேகரன். தவில் வித்துவான். எங்க ஊர்ல தைப்பூச விழா ரொம்ப சிறப்பா நடக்கும். 1980 இல் ஊரே திரண்டு கொண்டாடும் அளவிற்கு அப்படி ஒரு தைப்பூச திருவிழா நடைபெற்றது.

அப்போது அம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் திருவிழாவுக்கு போக முடியல. பாட்டி மட்டும் துணைக்கு இருந்தாங்களாம்.

காலையில 11 மணிக்கு அம்மாவுக்கு இடுப்பு வலி வந்து விட்டது. எங்க பாட்டி தான் பிரசவம் பார்த்தாங்களாம்.
திருவிழாவுக்கு போனவங்க கிட்ட குழந்தை பொறந்திருக்கிற செய்தியை பாட்டி சொல்லி அனுப்பங்க.

தைப்பூச திருவிழா கூட்டத்தில் மைக்கில் தவில்காரர் தனசேகரன் உடனே வீட்டுக்கு செல்லவும். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு என்று அறிவிப்பு செய்ய, அப்பா ஓடி வந்தாராம் வீட்டுக்கு. தைப்பூசத்தன்று பிறந்ததால் வேல் முருகன் என்று பெயர் வைத்தார்கள்.

அதைத் தொடர்ந்து படிக்கும் காலத்தில் லீவு நாட்களில் ஆடு மாடு மேய்க்கும் போது பாடுறதுனு பாட்டாவே கிடந்தேன். ஐடிஐ படிச்சிட்டு மியூசிக்குல இருந்த ஆர்வத்துல இசைப் பயிற்சிக் கல்லூரியில சேர்ந்தேன்.

ஒரு முறை ஏவிஎம் ஸ்டுடியோவில் டிவி ஷோ நடந்துச்சு. கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத அந்நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு ஒரு பாட்டு பாடினேன். அந்த பாட்டை கேட்டு சசிகுமார் சார் இந்தக் குரல் நல்லா இருக்குன்னு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கிட்டே சொல்லியிருக்கார்.

அப்படிதான் சுப்பிரமணியபுரத்தில்’மதுரை குலுங்க’ பாடல் பாடுற வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் இப்போது 300 பாட்டுகள் சினிமாவில் பாடியுள்ளேன்.  கையில் வெறும் 100 ரூபாய் உடன் தான் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தேன். ஆனால் இன்று எனக்கு சொந்த வீடு, பி.எம். டயிள்யூ கார் இருக்குது. அதற்கு முக்கிய காரணம் நான் தினமும் கும்பிடும் முருகன் அருள் தான் என்று கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker