Latestஉலகம்

கனடாவில் தீ விபத்து:- ஒரே குடும்பத்தில் ஏழு குழந்தைகள் பலி!

ஒட்டாவோ, பிப். 21- கனடாவின் நோவா ஸ்கோலியா பகுதியில் நேற்று அதிகாலை நடந்த தீ விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சிரியாவைச் சேர்ந்த இப்ராஹிம் குடும்பம் அகதிகளாக கனடாவுக்கு 2017 இல் வந்தது. ஹாலிபாக்சில் உள்ள அவர்கள் வீட்டில் நேற்று அதிகாலை 12.40 மணியளவில் திடீரென தீப்பற்றியுள்ளது.

வீட்டின் முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் பிடித்த தீயை அணைக்க முடியாமல் திணறியுள்ளனர் தீயணைப்பு வீரர்கள்.
வீட்டுக்குள் தீயில் சிக்கி இப்ராஹிமின் மூன்று மாதக் குழந்தை முதல் 14 வயது மகன் வரை ஏழு குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள்.

தீப்பற்றியெறியும் வீட்டுக்கு நுழைந்து பிள்ளைகளைக் காப்பாற்ற முயன்ற இப்ராஹிம் கடுமையான தீக்காயங்களுடன் அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவி காதர் பாரோ மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். சிரியாவில் போருக்கு தப்பி நிம்மதியாக கனடாவில் வாழலாம் என்று வந்த இப்ராஹிம் குடும்பம் தங்கள் குடும்பத்தையே இழந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker