Latestமலேசியா

கேடிஎம் இரயில் கட்டணம் 20 விழுக்காடு குறைப்பு

புத்ரா ஜெயா, பிப். 21- கேடிஎம் இரயில் கட்டணங்கள் இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து 20 விழுக்காடு குறைக்கப் படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

ஓராண்டுக்குப் பின்னர், இந்தக் கட்டண அமலாக்கம் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் கட்டணக் குறைப்பின் மூலம் சுமார் 94,000 பேர் பயனடைவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கேடிஎம்மின் 5 வழித் தடங்களைப் பயன்படுத்தும் பயணிகள் இந்தச் சலுகையைப் பெறுவர் என்றும் ரொக்கமில்லா கட்டண அட்டையைப் பயன்படுத்துவோர் மேலும் 20 விழுக்காட்டைக் கழிவாகப் பெறுவர்.

இந்தச் சலுகையைப் பெறுவதன் மூலம் பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவர் என அந்தோணி லோக் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker