Latestமலேசியா

செமிஞ்சே இடைத்தேர்தல்- 19 போலீஸ் புகார்கள்

செமிஞ்சே, பிப். 21 –  செமிஞ்சே இடைத்தேர்தல் சம்பந்தமாக இதுவரை 19 போலீஸ் புகார்களைப் பெற்றுள்ளதாக  காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சப்ரி அப்துல்லா தெரிவித்தார்.

அதில் அனுமதியின்றி தேர்தல் பரப்புரை நடத்திய  குற்றச்சாட்டும் அடங்கும்.  மொத்தம் 51 பரப்புரைக்கான அனுமதிகள் வழங்கப் பட்டுள்ளதாகவும் அதில் பக்காத்தானுக்கு 32 அனுமதிகள்  தேசிய முன்னணிக்கு 15அனுமதிகள்   பிஎஸ்எம்மிற்கு 4அனுமதிகள்
வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் 1954 ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டத்தை அணுக்கமாகப் பின்பற்றி வாக்களிப்பை சுமூகமாக நடத்த ஒத்துழைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker