Latestமலேசியா

பிரபல நகைச்சுவைக் கலைஞர் ‘எ.எம்.ஆர். புகழ்’ பெருமாள் காலமானார்

கோலாலம்பூர், பிப்.21- மலேசியாவின் பிரபல நகைச்சுவைக் கலைஞரான எ.எம்.ஆர். புகழ் பெருமாள் இன்று காலை காலமானார். கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக பல்வேறு மேடைகளிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் நகைச்சுவை நடிப்பை வழங்கி மக்களின் மனங்களில் பிடித்தவர்களில் பெருமாள் குறிப்பிடத்தக்கவர்.

எ.எம்.ஆர். நகைச் சுவைக் குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று கலைஞர்களில் ஒருவரான பெருமாள் அண்மைய காலமாக ஆஸ்துமாவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலையில் மருத்துவமனையில் அவர் உயிர்நீத்தார் என்று அவருடைய குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker