Latestஉலகம்

ராணுவத்தின் கைபொம்மை இம்ரான் கான்! -முன்னாள் மனைவி புகார்

இஸ்லாமாபாத், பிப். 21- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு ராணுவம் ஆட்டுவிக்கும் பொம்மையைப் போல் இருப்பதாகவும் அவர்கள் கூறுவதை போலவே அவர் நடந்து கொள்வதாகவும் அவருடைய முன்னாள் மனைவி ரேகம் கான் தகவல் வெளியிட்டு உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 14 ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். பலரும் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகம்மது என்கிற பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாக்குதல் நடந்து 5 நாட்கள் இது குறித்து அரசு தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் வாயிலாக பேசியிருக்கும் அவருடைய முன்னாள் மனைவி ரேகம் கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக இம்ரான் கான் செயல்பட்டு வருகிறார்.

தாக்குதல் முடிந்த பிறகு ராணுவத்தின் அனுமதிக்காக அவர் காத்திருக்கிறார். அவர்கள் கொடுத்த அறிக்கையினை தான் அப்படியே வெளியிட்டார். அவரால் சொந்த கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

முன்னாத இம்ரான் கான் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி ரேகம் கானை திருமணம் செய்து, அதே ஆண்டில் அக்டோபர்  மாதம் அவர் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker