Latestஉலகம்

வங்கதேசத்தில் அடுக்குமாடி வீட்டில் கோரத் தீ! 70 பேர் பலி

டாக்கா, பிப்.21- வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 70 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

டாக்காவின் பழமையான இடங்களின் ஒன்று சாவ்க்பஜார். இந்த பகுதியில் உள்ள மிகப் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது

அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி  இரசாயனப் பொருட்களை சேமித்து வைக்கும்  கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த கிடங்கில் பிடித்த தீ, பின்னர் வேகமாக பரவியது

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சுமார் 200 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

இந்த தீ விபத்து சாதாரணமாக மற்ற இடங்களில் நடைபெறும் விபத்து போன்றது இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய இரசாயன பொருட்கள் இருந்ததால் அவை வேகமாக பரவியது. எனவே தீயை அணைப்பதற்கு நீண்ட நேரம் ஆனது

இத்தீ விபத்தில் சிக்கி 70 பேர் பலியாக உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker