Latestமலேசியா

ECLR ரயில் திட்டம் ; மலேசியா -சீனாவுக்கு ஏற்புடையதாக அமையும்!

கோலாலம்பூர், பிப்.20- .சி.ஆர்.எல் (ECLR) எனப்படும் கிழக்கு கடற்கரை இரயில் இணைப்பு திட்டம் குறித்தான இறுதி முடிவு, மலேசியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பொருத்தமானதாக அமையும் என்று ஃபிட்ச் சொலுஷன்ஸ் மெக்ரோ ரீசர்ச் நிறுவனம் கணித்துள்ளது

இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கக் கூடியதாக அந்த இறுதி முடிவு அமைய வேண்டும் என்ற அடிப்படையில் தான், அது குறித்து இதுவரை முடிவு ஏதும் அறிவிக்கப் படவில்லை என்று அந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது

சீனாவுடனான மலேசியாவின் நல்லுறவுக்கு எவ்வித பாதகமும் ஏற்படாத வண்ணம், அதே வேளையில், நாட்டிற்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படாத வகையிலான முடிவை எடுக்க வேண்டிய அவசியம் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு உண்டு என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் மத்தியில் சுமூகமான பொருளாதார உறவு ஏற்பட்டுள்ளது. .சி.ஆர்.எல் திட்டத்தை ரத்து செய்தால், அவ்விரு நாடுகளுக்கும் இடையிலாக பொருளாதார உறவில் பாதகம் ஏற்படக் கூடும் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது

அதுமட்டுமல்லாது, அந்தத் திட்டத்தை ஒரேடியாக ரத்து செய்தால், அனைத்துலக ரீதியில் மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்என்று அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஆனால், .சி.ஆர்.எல் திட்டத்தை செயல்படுத்த அதிக பணத் தொகை தேவைப்படுகிறது என்பதால், அதனை செயல்படுத்த பிரதமர் சற்று ஆழமாக யோசித்து வருகிறார் என்றும் அந்நிறுவனம் சொன்னது

அந்தத் திட்டத்தை செயல்படுத்த ரிம.81.3 பில்லியன் தேவைப்படும் என்று கூறிய சீனா, அந்தத் தொகையை குறைத்துக் கொள்ள முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker