Latestமலேசியா

அடிப் மரண விசாரணை; நிறுத்த முடியாது! – நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், பிப். 22 – தீயணைப்பு வீரர் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணையைத் தொடர்ந்து நடத்தலாம் என மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த விசாரணையில் சீபீல்டு ஶ்ரீமகா மாரியம்மன் ஆலய பாதுகாப்புப் பணிக் குழுவை அதில் சம்பந்தப்பட்ட தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று வழக்கறிஞர் எம்,விஸ்வநாதன் மனுச் செய்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டத்தோ உமி கல்சோம் அப்துல் மஜீட், டத்தோ ஹர்மிண்டர் சிங் மற்றும் டத்தோ ஸ்டீபன் சுங் ஹியான் குவாங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆலய பணிக் குழுவிற்கு அந்த விசாரணையில் எந்தவித சம்பந்தமும் இல்லையென்றும் அந்த விசாரணையானது பொதுமக்களின் நலனை முன்னிட்டே நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும் அந்த விசாரணையை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டதோடு, அந்தக் கோரிக்கை மனுவின் விசாரணையை மார்ச் 4-க்கு ஒத்தி வைத்தனர். அதற்கான அபிடவிட்டை ஆலய பணிக்குழு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டனர். எட்டு நாள்களாக நடைபெற்று வரும் இந்த மரண விசாரணையில் இதுவரை 13 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker