Latestசினிமா

‘குடித்து விட்டு துன்புறுத்துகிறார்!-நடிகர் தாடி பாலாஜி மீது மனைவி போலீஸ் புகார்!

சென்னை, பிப். 22-  குடித்து விட்டு வந்து தன்னையும் தன் மகளையும் துன்புறுத்துவதாக பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கு எதிராக அவருடைய மனைவி நித்யா போலீசில் புகார் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் படங்களில் காமெடி நடிகராகவும் பிரபல தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருபவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தையும் உண்டு.

இவர்கள்  கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின் கமல்ஹாசன் உட்பட அனைவரின் அறிவுரையாலும் அவர்கள் மீண்டும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் நித்யா நேற்று  காவல் நிலையத்தில் தாடி பாலாஜி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தன்னுடைய  கணவரான தாடி பாலாஜி மீண்டும் குடித்து விட்டு தன்னையும் மகளையும் துன்புறுத்துகிறார். அவரது நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச  வார்த்தைகளில் என்னை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

தற்போது  தான் புதிய பெண்கள் இயக்கம் என்ற அமைப்பில்  தலைவியாக உள்ளேன். அதைக் கைவிடும்படி கோரி பாலாஜியும் அவரது நண்பர்களும் என்னை அவமானப் படுத்துகின்றனர். இதனால் நான் மிகவும் கவலையில் மனமுடிந்துள்ளேன் என புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.  

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker