Latestமலேசியா

மகாதீரின் கருத்தைத் திரித்துக் கூறாதீர்! -டான்ஶ்ரீ முகைதீன்

செமினி, பிப்.22- நாட்டில் அரசுத் துறையில் வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை தேவைக்கு மிஞ்சியதாக உள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியதை, யாரும் திரித்து கூற வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக் கொண்டார்.

ஒரு விஷயம் குறித்து நன்கு அறிந்துக் கொள்ளாமல், அதன் தொடர்பில் கருத்துரைப்பது தவறு என்று சுட்டிக் காட்டிய முகைதீன், பொதுத் துறை ஊழியர்களின் எண்ணிக்கை ஒரேடியாகக் குறைக்கப் படும் என்று பிரதமர் கூறவில்லை என்று தெரிவித்தார்.

தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பம் வாயிலாக, மிதம் மிஞ்சிய பொதுத் துறை ஊழியர்களின் எண்ணிக்கை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் படிப்படியாக குறைக்கப் படும் என்று அவர் சொன்னார்.

“திறந்த எண்ணத்தில், திறந்த மனத்துடன் பிரதமர் கூறியதை அனைத்து தரப்பினரும் அறிந்து புரிந்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

நாட்டில் மொத்தம் 1.7 மில்லியன் பொது சேவைத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் உள்ளர் என்றும், அந்த எண்ணிக்கை குறைக்கப் பட வேண்டும் என்றும் மகாதீர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இருந்த போதிலும், பொதுச் சேவை துறை ஊழியர்களின் எண்ணிக்கை அறவே குறைக்கப் படக் கூடாது என்று தான் தாம் கருதுவதாக முகைதீன் சொன்னார்.

“பிரதமர் உடனடியாக பொதுச் சேவை துறை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். படிப்படியாக, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில், அந்த எண்ணிக்கை குறைக்கப் படும்” என்று முகைதீன் கூறினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker