Latestமலேசியா

யுனெஸ்கோ அந்தஸ்தை இழக்கும் அபாயத்தில் தாசெக் சீனி!

பெக்கான், பிப். 22  –  பகாங்கில் உள்ள தாசேக் சீனி எனப்படும் இயற்கை வள ஏரியானது  கூடிய விரைவில் யுனெஸ்கோவினால் வழங்கப்பட்ட இயற்கைவளச் சிறப்பு அந்தஸ்தை இழக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அந்தஸ்தின் மூலம், குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு கிடைப்பதாகவும் அதனைக் கொண்டு அந்த ஏரியைப் பராமரிக்கவும் சுற்று வட்டாரத்தின் பொருளாதார பேம்பாட்டு வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் எனத் தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுப் பேராசிரியர் டாக்டர் முஸ்ரிஃபா இட்ரிஸ் தெரிவித்தார்.

நாட்டின் இரண்டாவது சிறந்த இயற்கைவள ஏரியாகக் கருதப்படும் தாசெக் சீனி, சுற்று வட்டாரத்தில் இரும்புத் தாது சுரங்க வேலைகளினால் மாசு படிந்து, இயற்கைவளம் பாதிக்கப்பட்டு,  அதன் தெளிந்த நீர் தற்போது சேறு கலந்த நீராக மாறி வருகிறது.

இந்தப் பிரச்சினையைத் தடுக்க  தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாசெக் சீனி ஐநாவின் சிறப்பு  அந்தஸ்தை இழக்க நேரிடும் என முஸ்ரிஃபா எச்சரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker