Latestமலேசியா

தீபாவளிக்கு 2 நாள் விடுமுறை கோரி இணையம் வழி இயக்கம்!

கோலாலம்பூர், பிப்,23- மலேசிய இந்திய நம்பிக்கை இயக்கத்தின் தலைவரான மணிமாறன் என்பவர் தீபாவளி – கிறிஸ்துமசுக்கும் அரசாங்கம் 2 நாள் விடுமுறை விட வேண்டும் என்று கோரி, இணைய விண்ணப்ப இயக்கம் ஒன்றை கடந்த 19 ஆம் தேதி தொடங்கினார்.

அரசாங்கம் தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை விடவேண்டும் என்பதே தங்களுடைய இயக்கத்தின் நோக்கம் என்றார் அவர்.

ஏற்கெனவே கடந்த ஆண்டில் அரசாங்கம் தீபாவளிக்கு இரு நாள் விடுமுறையை அனுமதித்துள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.இது தங்களின் இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அவர் கூறினார்.

தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை கோரும் தங்களுடைய இயக்கத்தின் கோரிக்கைக்குப் பிரதமர் செவிசாய்க்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker