Latestமலேசியா

குடியிருப்புகளை ஆக்கிரமிக்கும் அந்நிய தொழிலாளர்கள்! -உள்ளூர்க்காரர்கள் படும் அவதி

கோலாலம்பூர், பிப்.24 – புக்கிட் மெர்தாஜாம், தாமான் நாகாசாரி குடியிருப்புப் பகுதிகள், தற்போது அந்நிய நாட்டவர்களின் தாமானாக கிட்டத்தட்ட மாறி விட்டது. அந்நியர்கள் ஆயிரக்கணக்கில் பெருகி வருவது உள்ளூர்காரர்களுக்குப் பெரும் அவதியைத் தருவதாக ஏற்படுத்துவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

ஒவ்வொரு வாடகை வீட்டிலும் குறைந்தது 40 பேர் வரை குடியிருப்பதோடு, சொந்தமாக அறைகளைத் தடுத்தும், வீட்டின் முன் பகுதியில் கூடுதல் குளியறைகளை உருவாக்கி பயன்படுத்தவும் செய்கின்றனர்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு உணவை விநியோகம் செய்வதால், காய்கறிகளையும் எஞ்சிய உணவுகளையும் வீட்டுக்குப் பின்னால் உள்ள கால்வாய்களில் கொட்டி விட்டுச் செல்கிறார்கள்.

இதனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு நீரோட்டம் தடுக்கப்பட்டு, சாலைகளில் குப்பைக் கூளங்களை வீசப்பட்டு அசுத்தப் படுகின்றன.

அவர்கள் உள்ளூர்காரர்களைக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் மனம் போன போக்கில் சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவதால் உள்ளூர்க்காரர்கள் ஒருவித அச்ச உணர்வோடு வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு சட்டவிரோதக் கடைகளை நடத்துவதால் உள்ளூர் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, இந்தப் பிரச்னை கட்டுக்கடங்காமல் போனால், அங்கு சொந்த வீடுகளில் ஆண்டுக் கணக்கில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள் வேறிடங்களுக்கு மாறிச் செல்ல நேரிடும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அந்நிய தொழிலாளர்களின் அசுத்தமான நகரம் ஒன்று இங்கே உருவாதைத் தடுக்க முடியாமல் போகலாம் . என எச்சரிக்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker