Latestமலேசியா

‘விஜய் சேதுபதி பயங்கரமான ஆளு’ – தமன்னா

சென்னை, பிப்.24- ‘கண்ணே கலைமானே’ படம் இருக்கும் நிலையில் தமன்னா அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி பற்றி அவர் கூறும் போது, “விஜய் சேதுபதி பயங்கரமான ஆளு. இயற்கையான< இயல்பான மனிதர்’ என்று வர்ணித்தார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் -தமன்னா நடிப்பில் கண்ணே-கலைமானே வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமன்னா அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசியதாவது:-

விஜய் சேதுபதி – இயற்கையான நடிகர். இயல்பாக இருப்பார். எஅனக்குப் பிடித்த நடிகர்களுள் அவரும் ஒருவர். அவர் நடிப்பதே தெரியாது. அந்த அளவுக்கு சிறந்த நடிகர். மணிரத்னம் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன்.

கார்த்தியுடன் 3 படங்கள் நடித்திருக்கிறேன். வித்தியாசமான நடிக்க விரும்புபவர். விஜய் ரொம்ப அமைதியாய் இருப்பார். அஜித்- குடும்ப மனிதர். படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு சமைத்து கொடுப்பார். பிரபாஸ், பாகுபலி ஓர் உண்மையான பாகுபலி. இரக்க குணமுடையவர்

தமிழ்ப் பையனைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னீர்களே? என்று கேட்கிறார்கள். நான் முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில் தவறாக அது புரிந்து கொள்ளப்பட்டது. மொழி பிரச்சனையால் அப்படி புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.

நான் அப்படி சொல்லவில்லை. ஒரு நல்ல பையன் கிடைக்க வேண்டும். தமிழோ அல்லது வேறு எந்த மொழியாக, இருந்தாலும் பரவாயில்லை. நல்லவராக இருக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். இவ்வாறு தமன்னா கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker