Latestவிளையாட்டு

அர்சனலுக்கு அபார வெற்றி!

லண்டன், பிப் 25- நேற்று நடந்த இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்சனல் வாகை சூடியது. முற்பகுதி ஆட்டத்தின் போது போடப்பட்ட இரண்டு கோல்களின் மூலம் சவுத்ஹாம்டன் குழுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை அர்சனல் நிலை நிறுத்தியது.

இந்த வெற்றியின் மூலம் பிரிமியர் லீக்கில் அர்சனல் 4 ஆவது இடத்தில் உள்ளது. முற்பகுதி ஆட்டத்தின் 6 ஆவது நிமிடத்தில் முன்னணி வீரர் லக்காஸெட் அர்சனலின் முதல் கோல் அடித்தார்.

அடுத்து 17 ஆவது நிமிடத்தில் மத்தியதிடல் வீரர் மக்கிட்டாரீயான் 2 ஆவது கோலை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிமியர் லீக்கில் தற்போது லிவர்புல் முதலிடத்திலும் அடுத்து மன்.சிட்டி 2 ஆவது இடத்திலும் டோட்டன்ஹாம் 3 ஆவது இடத்திலும் அர்சனல் 4 ஆவது இடத்திலும் மன்.யுனைடெட் 5 ஆவது இடத்திலும் உள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker