Latestவிளையாட்டு

கராபாவ் கிண்ணம்: மன்.சிட்டி சாம்பியன்! செல்சீயை வீழ்த்தியது!

லண்டன், பிப், 25- இங்கிலாந்தின் கராபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் 4-3 என்ற பெனால்டிக் கோல்களில் செல்சீ குழுவை வீழ்த்தி, மன்செஸ்ட்டர் சிட்டி குழு சாம்பியனாக வாகை சூடியது.

இரு குழுக்களுக்கும் இடையிலான வழக்கமான ஆட்டம் முடிந்த நிலையிலும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்ததால் பெனால்டி மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் 4 பெனால்டிகளை மன்செஸ்ட்டர் சிட்டி கோலாக்கியது. செல்சீ மூன்று பெனால்டிகளை கோலாக்கியது. இந்த ஆட்டத்தில் பரப்பரப்பான அம்சமாக விளங்கியது என்னவெனில் செல்சீ கோல்கீப்பர் கெப்பா அரிஷாபாலக்காவின் நடவடிக்கைதான்.

வழக்கமான ஆட்டம் நேரம் முடிந்தவுடன் செல்சீ நிர்வாகி மரிஷியோ சாரி, தனது கோல்கீப்பர் கெப்பாவை, மாற்றி, பெனால்டிகளை எதிர்கொள்ள மாற்று கோல்கீப்பரை உள்ளே அனுப்ப முயன்றபோது நிர்வாகியின் உத்தரவை ஏற்கமறுத்து கெப்பா அடம்பிடித்தார்.

இதனால், வேறு வழியின்றி கெப்பா, தொடர்ந்து பெனால்டிகளை எதிர்கொள்ள நிர்வாகி சாரி அனுமதித்தார். பகிரங்கமாக நிர்வாகியின் உத்தரவை ஏற்க மறுத்ததன் வழி செல்சீ கோல்கீப்பர் கெப்பா இந்த ஆட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker