Latestமலேசியா

கார் தடம் புரண்டு தூக்கி வீசப்பட்ட மாணவி பரிதாப மரணம்!

கோலாலம்பூர், பிப்.25 – கோலாலம்பூர், ஜாலான் சுங்கை பீசியில் கார் ஒன்று தடம் புரண்டதில், அதிலிருந்து தூக்கி எறியப்பட்ட 16 வயது மாணவி, கடும் காயங்களுக்கு  உள்ளாகி இறந்தார்.

இன்று காலை 5 மணியளவில் நேர்ந்த அவ்விபத்தில், கெப்போங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த சின் ஸின் குய் என்ற மாணவி காரிலிருந்து எரியப்பட்டு மரணமடைந்த வேளியில், அவரோடு பயணித்த ஓட்டுநரும் மற்றவர்களும் கடுமையான காயத்துக்குள்ளாகினர்.

சிரம்பான் நெடுஞ்சாலையின் ஜாலான் சுங்கை பீசியில் காரின் ஓட்டுநர் கோ காய் சென் (வயது 19) என்பவர் காரைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அந்த விபத்து நேர்ந்ததுள்ளது.

ஓட்டுநரும் மற்ற பயணிகளும் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்துப் புலனாய்வு மற்றும் அமலாக்க இலாகா தலைவர் துணை ஆணையர் ஷுல்கிப்லி யாஹ்யா தெரிவித்தார்.

இறந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அ கொண்டு செல்லப்பட்ட வேளையில், காயமடைந்தோர் சிகிச்சைக்காக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker