Latestமலேசியா

கோத்தாகினாபாலு சிகரத்தில் 61 வயதுடைய அமைச்சர் குலா!

கோத்தாகினாபாலு, பிப்.25- கோத்தாகினாபாலு மலையின் சிகரத்தை தொடும் முயற்சியில் 61 வயதுடைய மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் வெற்றி பெற்றார். மேலும் மீண்டும் ஒருமுறை அந்தச் சிகரத்தை அடையத் தாம் திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் சொன்னார்.

93 வயது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தமக்கு மிகச் சிறந்த உந்துதலாக விளங்குகிறார். அதனால் தான் மலேசியாவின் மிக உயர்ந்த சிகரமான 4,095 மீட்டர் உயரம் கொண்ட  கினாபாலு சிகரத்தை தொடும் முயற்சியில் தாம் இறங்கியதாக அவர் தெரிவித்தார்.

“எனக்கு இப்போது 61 வயது. இந்த வயதில் மலேசியாவின் உயரிய சிகரத்தைத் தொடுவது என்பது எனக்கு மிகப்பெரிய சவால் தான்” என்றார் அவர்.

இருமுறை எவரெஸ்ட் சென்ற மலையேறும் வீரரான டி. ரவிச்சந்திரன் தலைமையிலான குளோபள் மலையேறும் கிளப்பின் ஏற்பாட்டில் 48 பேர் கொண்ட குழு கினாபாலு மலையேறும் முயற்சியில் இறங்கியது. அந்தக் குழுவில் குலசேகரனும் இடம்பெற்றிருந்தார்.

இதுவொரு அற்புதமான, சவால் மிக்க முயற்சி. மலையின் உச்சியை நெருங்கும் போது காற்றின் அடர்த்தி மிக மெலிந்து காணப்பட்டதால் தாம் கடும் போராட்டத்தை எதிர்கொண்டதாக குலசேகரன் கூறினார்.

இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள மலேசியர்கள் முன்வரவேண்டும் . மேலும் இத்தகைய மலையேறும் முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker