Latestமலேசியா

தாம் தாக்கப் படவில்லை என அடிப் சமிக்ஞை செய்தார்! -மருத்துவ நிபுணர் சாட்சி

ஷா ஆலம், பிப், 25 – சீபீல்ட் ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயப் பகுதியில் தாம் தாக்கப்படவில்லை என முகமட் அடிப் சமிக்ஞை மூலமாகத் தெரிவித்ததாக இருதய நோய் நிபுணர் டாக்டர் முகமட் எஸானி மாட் தாய்ன் குறிப்பிட்டார்.

தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்ட கடந்தாண்டு நவம்பர் 29 லிருந்து டிசம்பர் 17 வரை முகமட் அடிப்பிற்கு சிகிச்சை அளித்து வந்ததாகக் குறிப்பிட்டார். முகம்மட் அடிப்பின் மரண விசாரணையில் சாட்சியம் அளித்த போது அவர் டாக்டர் எஸானி மேற்கண்டவாறு சொன்னார்.

அப்போது அடிப்பின் நண்பர் ஒருவர் அடிப் ஆலயத்தில் தாக்கப்பட்டதாகத் தம்மிடம் கூறியதாக டாக்டர் எஸானி குறிப்பிட்டார். ஆனால், தாம் அடிப்பிடம் அது பற்றி நேரடியாக  கேட்டபோது, அடிப் அதற்கு மறுக்கும் வகையில் தலையாட்டி தாக்கப்படவில்லை என்பதாக சமிக்ஞை செய்தார். மேற்கொண்டு தமக்கு நினைவில்லை என்றும் சமிக்ஞை வழியாகத் தெரிவித்ததாக எஸானி தெரிவித்தார்.

அடிப்பின் மரண விசாரணையின் 10 நாளின் போது 14ஆவது சாட்சியான முகமட் எஸானி சாட்சியமளித்தார். சீபீல்ட் ஆலயத்தில் நடந்த கலவரத்தின்போது சில வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதை அணைக்கச் சென்ற அடிப், படுகாயமடைந்து சுபாங் ஜெயா மருத்துவ மையத்தில் அனுமதிக்கப் பட்டார்.

பின்னர், கோலாலம்பூர் தேசிய இருதய கழக்கத்திற்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 17இல் மரணமடைந்தார். அவர் எப்படி காயம் பட்டார் என்பதைக் கண்டறிய மரண விசாரணை ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ரோஃபியா முகமட்டின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker