Latestவிளையாட்டு

பல ஆட்டக்காரர்கள் காயம்: மன்.யுனை. – லிவர்புல் சமநிலை!

மன்செஸ்ட்டர், பிப்,25- இங்கிலீஷ் பிரிமியர் கால்பந்து போட்டியில் பரபரப்பாக நடந்த ஆட்டத்தில், மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவும் லிவர்புல் குழுவும் கோல் எதுவுமின்றி சமநிலையில் ஆட்டத்தை முடித்தன.

இதன்வழி பிரிமியர் லீக் பட்டியலில் லிவர்புல் தற்காலிக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தனது பரம வெரியான மன்.யுனைடெட் குழுவுடன் சமநிலை கண்டதில் லிவர்புல் மனநிறைவு அடைந்ததாகவே தெரிகிறது.

இந்த ஆட்டத்தில், லிவர்புல் முற்பகுதியில் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எனினும், ஆட்டம் தொடங்கிய முதல் இரு குழுக்களைச் சேர்ந்த ஆட்டக்காரர்களும் காயமடைந்து வெளியேறிக் கொண்டே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்.யுனைடெட் குழுவைச் சேர்ந்த அண்டெர் ஹெர்ரேரா, ஜுவான் மாட்டா மற்றும் ஜெசி லிங்கார்டு ஆகியோர் காயமடைந்து வெளியேறினர்.

இந்நிலையில் முன்னணி வீரர் ரஷ்போர்டும் காயமடைந்தார் என்றாலும் மாற்று ஆட்டக்காரரை களமிறக்க முடியாத நிலையில் அவர் கடைசிவரையில் விளையாட நேர்ந்தது.
லிவர்புல் குழு தரப்பில் ரோபெர்ட்டோ பிர்மினோ, காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker