Latestமலேசியா

மேலும் பல பொருள்களின் விலைகள் கட்டுப் படுத்தப்படும்! – அமைச்சர்

கோலாலம்பூர், பிப். 25 – தற்போது அரசி, சீனி மற்றும் சமையல் எண்ணெய்க்கு விதிக்கப்பட்டு வரும் விலைக் கட்டுப்பாடானது, மேலும் 30 வகையான பொருள்களுக்கு விரிவு ப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதனை அறிவித்த உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன், பேரங்காடிகளில் விற்கப்படும் 4,000 பொருள்களில், பயனீட்டாளர்கள் அதிகமாக வாங்கும் பொருள்களின் பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்னர் அது அமலுக்கு வரும் எனத் தெரிவித்தார்.

அந்தப் பட்டியலில் திடீர் மீ வகைகள், முட்டை, சமையல் எண்ணெய், ரொட்டி, சோயா சோஸ், கொத்து இறைச்சி, கோழி இறைச்சி ஆகியவை அடங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறும்போது, நாட்டில் குறிப்பிட்ட பொருள்களின் உற்பத்தி குறைந்தால், அந்தப் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தற்காலிகத் தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker