Latestஉலகம்

வங்காளதேச விமானத்தை கடத்த முயற்சி: தீவிரவாதி சுடப்பட்டான்!

டாக்கா, பிப். 25-  வங்காளதேச தலைநகர் டாக்காவின் விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்த  முயன்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

வங்காளதேச அரசுக்கு சொந்தமான பிமன் பிஜி 147 போயிங் ரக விமானம் டாக்கா விமான நிலையத்தில் இருந்து மாலை சுமார் 5 மணியளவில் 148 பயணிகளுடன் துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கையில் துப்பாக்கியுடன் விமானியின் அறைக்குள் நுழைந்த ஒரு பயங்கரவாதி விமானியை மிரட்டி விமானத்தை கடத்திச் செல்ல முயன்றுள்ளான்.

இதையடுத்து தரையில் உள்ள கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி அருகிலுள்ள சிட்டகாங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.

அதற்குள் சிட்டகாங்கில் உள்ள ஷா  விமான நிலையத்தில் ஏராளமான போலிசாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டனர். உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணியளவில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியது,

அந்நிலையில் அதில் இருந்த 148 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.  உள்ளே இருந்த தீவிரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker