Latestமலேசியா

கைப்பேசி வெடித்ததா, தலையில் தாக்கப்பட்டாரா? தொழிலபதிபரின் மரணத்தில் திருப்பம்!

கோலாலம்பூர், பிப். 26 –  தொழிலதிபரும் ‘கிரேடல் பண்ட்’ தலைமை செயல்முறை அதிகாரி  நஸ்ரின் ஹசான், கைப்பேசி வெடித்ததால் மரணமடையவில்லை. மாறாக தலையில் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதாக  2ஆவது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு ஜூன் 14இல்,  முத்தியாரா டமான்சாரா இரட்டை மாடி வீட்டில், கைப்பேசி சார்ஜ்  வெடித்து ஏற்பட்ட  தீயினால் நஸ்ரின் (வயது 45) மரணடைந்ததாகவும் அவரின் அறையில் பெட்ரோலின் தடயம் காணப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

சந்தேகத்தின் பேரில், நடத்தப்பட்ட இரண்டாவது சவப் பரிசோதனையில்,  அவரின் தலையில் ஏற்பட்ட பல காயங்களினால் மரணம் நிகழ்ந்துள்ளதாகக்   குறிப்பிடப்பட்டுள்ளது.

அது ஒரு கொலை என்ற ரீதியில்  விசாரணை நடத்தப்பட்டு, நஸ்ரினின் மனைவி சமீரா முஸாபார், அவர்களின் இரண்டு புதல்வர்கள், சமீராவின் முன்னாள் கணவர் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்படாமலேயே விடுவிக்கப்பட்டனர்.

கடந்தாண்டு அக்டோபரில் நடத்தப்பட்ட இரண்டாவது பரிசோதனையின் முடிவு காலம் தாழ்த்தி வெளியிடப்பட்டதற்கான  காரணம் எதுவும் தெரிவிக்கப் படவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker