Latestமலேசியா

சுடுநீர்க் கொட்டியதால் அலறித் துடித்த குழந்தை! தாயாரின் கவனக் குறைவா?

ஜொகூர்பாரு, பிப். 26 –  தாயாரின் கவனக் குறைவினால்  உடலில் சுடுநீர் பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

ஜொகூர், கெம்பாஸ் எனும் இடத்தில், கணவருக்குத் தேநீர் கலக்க சுடுநீரை கிளாஸில் ஊற்றிய பின்னர்,  அலமாரியிலிருந்து சீனியை எடுக்க முயன்றபோது, தமது பெண் குழந்தை வீறிட்டு அழுததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் 23 வயதுடைய தாயார் நோர் ஹயாத்தி யாஸிட்.

குழந்தையை ஓடிச் சென்று பார்த்த போது  கிளாஸில் ஊற்றப்பட்டிருந்த சுடுநீர் குழந்தையின் மீது   கொட்டிவிட்டதால் அது அலறித்துடித்தைக் கண்டதாக  தாயார் நோர் ஹயாத்தி  வேதனையுடன்  தெரிவித்தார்.

சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை நுர் அஃபீயா ஹுமாரியா, பின்னர் ஜொகூர்பாரு சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள்.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவ நிபுணர், குழந்தையின் உடலில் 13 விழுக்காட்டுப் பகுதி பாதிக்கப் பட்டிருப்பதாகவும் அதன் முகம், உடல், கழுத்து, கை போன்றவற்றில் கொப்புளங்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

சுடுநீர் ஊற்றப்பட்ட கிளாஸை மேசையின் மீது,  குழந்தைக்கு எட்டாத தூரத்தில் வைத்திருந்ததாகவும், அது  கவிழ்ந்து குழந்தையின் மீது எப்படி கொட்டியது என்பது தமக்குப் புரியவில்லை என நோர் ஹயாத்தி குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker