Latestஇந்தியா

ஜெயலலிதா பற்றிய திரைப்படம் “தலைவி” -இயக்குனர் விஜய் தகவல்

சென்னை, பிப். 26- ஜெயலலிதா வாழ்க்கை  பிரதிபலிக்கும்  திரைப்படத்திற்கு ‘தலைவி’ என்று தாம் பெயர் வைத்திருப்பதாக இயக்குனர் விஜய் அறிவித்துள்ளார்.

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை சினிமா படமாக்க போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. இயக்குனர் பிரியதர்ஷினி “தி அயன் லேடி’ (இரும்புப் பெண்மணி) என்று பெயரில்  பட வேலைகளை தொடங்கி உள்ளார். இந்தப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நித்யாமேனன் நடிக்கிறார். அவரது தோற்றமும் வெளியாகி உள்ளது.

இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய் ஆகியோரும் ஜெயலலிதா வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை படமாக்குவது குறித்து இயக்குனர் விஜய் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா வாழ்க்கையைப் படமாக்குகிறேன். இந்தப் படத்துக்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைத்துள்ளோம். வருகிற ஏப்ரல் மாதம் படப்படிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளோம்.  இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்திலும் மற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்கும் நடிகர் நடிகை தேர்வு நடக்கிறது.

இன்னும் 10 நாட்களில் நடிகர் நடிகைகள் முடிவு செய்யப்பட்டு விடும். ஜெயலலிதா வாழ்க்கையைப் படமாக்குதவதற்கு அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் பேசி அனுமதி பெற்று விட்டோம்.

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா, மஞ்சிமா மோகன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய், வித்யாபாலன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோரும் பரிசீலிக்கப் படுவதாக கூறப்படுகிறது. எம்ஜிஆர் வேடத்தில் நடிக்க மோகன்லால் உள்ளிட்ட சிலரிடமும் பேசி வருகிறோம் என்றார் இயக்குனர் விஜய்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker