Latestமலேசியா

முகநூலில் இஸ்லாத்தை அவமதித்ததாக தனேசன் மீது குற்றச்சாட்டு!

ஷாஆலம், பிப். 26- தொழிற்சாலை ஊழியரான எ.தனேசன் (வயது 22) இஸ்லாத்தை அவமதித்ததாக ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

பிப்ரவரி 19ஆம் தேதி காலை 11.40 மணியளவில், அச்செய்தியை அவர் முகநூலில் பதிவேற்றியதாகக் குற்றவியல் சட்டம் பிரிவு 298ஏ-யின் கீழ், பிரிவினையையும் விரோத மனப்பான்மையையும் குரோதத்தையும் சமய துவேஷத்தோடு விதைத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ரிம. 8,000 பிணையில், ஒருவர் உத்தரவாதத்தின் பேரில் தனேசனை நீதிபதி ரினி டிரியானி விடுவித்தார்.

இருவாரங்களுக்கு ஒரு முறை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு ஏப்ரல் 5 இல் விசாரணைக்கு வரும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker