Latestஉலகம்

ரயிலில் வந்தார் கிம் ஜோங்; விமானத்தில் வருகிறார் டிரம்ப்!

வாஷிங்டன்,பிப்.26- அமெரிக்காவுடன் அணுவாயுதப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன் இன்று ரயில் மூலம் வியட்னாம் வந்து சேர்ந்தார். எல்லையை வந்தடைந்த அவ, பின்னர் அங்கிருந்து தலைநகர் ஹனோய்க்கு காரில் புறப்பட்டார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன் இருவரும் கடந்த 2018 ஆம் சிங்கப்பூரில் உச்சநிலை மாநாட்டில் முதல் முறையாக சந்தித்து பேசினர்.

இந்தப் பேச்சு வார்த்தையின் போது கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக் கொண்டனர். இதையொட்டி ஒரு உடன்பாடும் செய்து கொண்டனர்.

ஆனாலும் இந்தத் திட்டம் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. இந்நிலையில் வடகொரியா தலைவர் கிம், மீண்டும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடந்த முயற்சி மேற்கொண்டார். இந்த அழைப்பை அதிபர் டிரம்ப் ஏற்றார்.

அதன்படி நாளை பிப்.27 மற்றும் பிப். 28 ஆம் தேதிகளில் இருநாட்டுத் தலைவர்களும் தலைநகர் ஹனோயில் இரண்டாவது முறையாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக அதிபர் டிரம்பும் சிறப்பு விமானத்தில் வியட்னாம் புறப்பட்டார். அவர் இன்று  பிற்பகலில் வியட்னாம் வந்து சேருவார். இதன் மூலம் இரண்டாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடக்கவுள்ளதால் உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker