Latestமலேசியா

2% மூளையுடன் பிறந்த குழந்தை: மருத்துவ உலகின் அதிசயமாக மாறியது!

லண்டன், பிப். 26- வெறும் 2 விழுக்காடு மூளையுடன் பிறந்த நோவாவெல் என்ற குழந்தை சில தினங்களில் உயிரிழந்து விடும் என கருதப்பட்ட நிலையில் மருத்துவ உலகின் அனுமானங்களையும் மீறி 6 ஆண்டுகலாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது.

கடந்துள்ள நிலையில் சராசரி மனிதர்கள் போல நீண்ட காலத்துக்கு உயிர் வாழ்வான் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள கம்பிரியா நகரை சேர்ந்த ராப் என்பவரின் மனைவி ஷெல்லி. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்த போது வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது குழந்தைக்கு 2 விழுக்காடு அளவுக்கே மூளை இருந்தது தெரிய வந்தது.

எனவே, கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அத்தம்பதியினர் அதனை விரும்பவில்லை. 2 விழுக்காடு மூளையுடன் பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு நோவாவெல் என பெயரிட்டனர்.

அக்குழந்தை பார்வையின்றி பேசும் – கேட்கும் திறனின்றி வளர்ந்தது. பின்னர் நோவாவெல்லை ஆஸ்திரேலிய மருத்துவர்களின் கண்காணிப்பில் பெற்றோர் ஒப்படைத்தனர்.

மூன்று வயதுக்குப் பின் நோவாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சையின் போது அவனது மூளை வளர்ச்சி விகிதம் அதிகமானது. தற்போது 6 வயதாகும் நோவாவெல்லின் மூளை 80 விழுக்காடு அளவை எட்டியுள்ளது.

தொடர் சிகிச்சையின் மூலம் நோவாவெல் முழுமையான மூளை வளர்ச்சியைப் பெற்று சராசரி மனிதர்கள் போல உயிர் வாழ்வான் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கு முந்தைய காலக்கட்டத்தில் மூளை குன்றிப் பிறந்த குழந்தைகள் சராசரி 3 ஆண்டுகளுக்குள் இறந்து விட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நோவாவெல் மருத்துவ உலகின் அதிசயம் என அவர்கள் வர்ணித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker