Latestஉலகம்

ஃபெர்ரி தீப்பற்றிய சம்பவம்; வேண்டுமென்றே செய்த சதியா?

லங்காவி, பிப்.27- கோலா பெர்லீஸ் பகுதிக்கு 58 பயணிகளை ஏற்றிக் கொண்டுச் சென்ற ஃபெர்ரி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், அந்தத் தீ வேண்டுமென்றே சில தரப்பினரால் வைக்கப் பட்டிருக்கும் என்று போலீஸ் தரப்பினர் சந்தேகிக்கின்றனர். 

அந்தத் தீ சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் காவல் துறை தொடக்கக் கட்ட விசாரணை அறிக்கையை தொடங்கி உள்ளது என்று ஓசிபிடி சூப்ரீண்ட் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார். 

“அந்த ஃபெர்ரியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை இலாகாவினர் தடயவியல் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முடிவு கிடைப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதன் வாயிலாக அந்தத் தீப்பற்றிய சம்பவம் குற்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறதா என்பது தெரிய வரும்” என்று அவர் சொன்னார். 

இந்தச் சம்பவம் தொடர்பில், அதன் பயணிகள் தன்னை தொடர்புக் கொண்டு தகவல் தெரிவித்ததாக முகமட் இக்பால் குறிப்பிட்டார். 

“கிடைக்கப் பட்ட தகவலைக் கொண்டு, லங்காவியிலிருந்து கோலா பெர்லீஸ் பகுதியை நோக்கி பயணித்த அந்த ஃபெர்ரியின் பயணிகளை காப்பாற்ற நாங்கள் கடற்படை போலீஸ் அதிகாரிகளை அனுப்பி வைத்தோம். 

“படகு துறைமுகத்திலிருந்து மதியம் 2.30 மணிக்கு பயணத்தை தொடங்கிய அந்த ஃபெர்ரியில், 10 நிமிடங்களில் தீ ஏற்பட்டுள்ளது. அந்த ஃபெர்ரியின் கேப்டன் மற்றும் ஐந்து ஊழியர்கள் உட்பட 58 பயணிகள் காயங்கள் ஏதுமின்றி காப்பாற்றப் பட்டனர்” என்று அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker