Latestஉலகம்

இந்தியா- பாக். மோதலை நிறுத்துங்கள்! – சீனா கோரிக்கை

பெய்ஜிங், பிப். 27- இந்தியாவும் பாகிஸ்தானும் கட்டுபாட்டுடன் நடந்து கொள்வதன் மூலம் இந்தப் பகுதியில் அமைதி நிலவ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆதரவு  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி முகாம்களை முற்றிலும் அழித்தன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளதை குறித்து சீனா கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லு ஹாங்  கூறியதாவது:-

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் அமைதி நிலவ ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மீண்டும் நல்லுறவு ஏற்படவும் இணக்கமான சூழல் நிலவவும் இரு தரப்பும் ஒத்துழைப்பு அளிப்பது அத்தியாவசிமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker