Latestமலேசியா

ஒரு கும்பல் சூழ்ந்திருந்ததைப் பார்த்தேன்! – நசாருடின் சாட்சியம்

ஷா ஆலம், பிப். 27- அதிகாலை நேரத்தில் ஆலய வளாகத்திற்கு வெளியே ஒரு கும்பல் யாரையோ அடிப்பது போன்றும் எட்டி உதைப்பதைப் போன்றும், செய்து கொண்டிருப்பதை  தாம் கண்டதாக நசாருடின் அப்துல்லா எனபவர் அடிப் மரண விசாரணையில் சாட்சிமளித்தார்.

கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி, அதிகாலையில் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் உசாகாவில் உள்ள சீபீல்ட் மகா மாரியம்மன் ஆலய வளாகத்திற்கு வெளியே முப்பது பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து இருந்தது.

சிலர் ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களின் செயல் யாரையோ அடிப்பது போன்று காணப்பட்டது. எனினும் யாரும் அடிபடுகிறார்களா என்பதை என்னால் பார்க்க முடியவில்லை.

அவர்கள் சுற்றி சூழ்ந்து கொண்டிருந்தார்கள் நடுவில் இருந்தது யார், எது என்றெல்லாம் பார்க்க முடியவில்லை. இது ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே நடந்து முடிந்து விட்டன  என நசாருடின் தெரிவித்தார்.

அதன் பின்னர், போலீஸ் வருவதாகச் சிலர் சொல்ல, அந்தக் கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும்  நசாருடின் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், நரேஸ் ராஜேந்திரன் என்பவர் தமது சாட்சியத்தில், தாம் அங்கிருந்த பொதுமக்களில் சிலரை அணுகி காயம்பட்ட ஒருவரை சுபாங் ஜெயா மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்ல உதவி கேட்டதாகத் தெரிவித்திருந்தார்.

கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி அதிகாலையில் சீபீல்ட் ஆலய வளாகத்தில் தீயணைப்பு வீரர் அடிப் கடமையில் இருந்தபோது, எப்படி காயமடைந்தார் என்பதைக் கண்டறியும் மரண விசாரணையில் நசாருடின் சாட்சியமளித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker