Latestஇந்தியா

கமலின் 3 ஆவது அணி முயற்சி , பலிக்குமா, பலிக்காதா?

சென்னை, பிப். 27- திமுக- அதிமுக கூட்டணியில் இணையாமல் தனித்து போட்டியிட போவதாக அறிவித்த கமல்ஹாசன், பின்னர் திடீரென ஒத்த கருத்துடையவர்கள் வந்தால் கூட்டணி அமைப்போம் என்றார்.

கேரள முதல்வர் நல்ல அறிமுகம் என்பதால் அவரது முயற்சியால் டில்லி சென்று, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத்தை சந்தித்து கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் பிரகாஷ் காரத் தமிழகத்தில் திமுக கூட்டணி என்பது முடிவாகிவிட்டது. தற்போது திடீரென மாற்ற முடியாது என்று கூறி விட்டதால் கமல் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.

அதன் பின் பாஜக அளவு கூட தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாத ஆம் ஆத்மி கட்சியின் தலைவரை கமல் சந்தித்தார்.

ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதும் தனித்து போட்டியிடுவதும் கிட்டத்தட்ட ஒன்று என்ற முடிவுக்கு வந்த கமல், அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்பு நட்பு ரீதியானது என்று கூறி ஒரு வழியாக சமாளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தேமுதிகவும்,  அதிமுக கூட்டணியில் பாஜகவும் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் கமல் மீண்டும் தனித்து போட்டி என்ற பல்லவியையே பாடவேண்டும் என்பதை தவிர வேறு வழியில்லை. 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker