Latestமலேசியா

டிரம்ப் மீது முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார்!

வாஷிங்டன், பிப். 27 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது டிரம்ப் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜோன்சன் என்ற பெண், தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் மீது கவர்ச்சிப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்குற்றச்சாட்டுகளால், டிரம்ப்க்கு பெண்களின் ஆதரவு வெகுவாக குறைந்தது. எனினும் அவர் வெற்றி பெற்று அதிபரானார்.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜோன்சன் என்ற பெண் , தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டிரம்ப் மீது புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தன்னுடைய மனுவில் 2016 ஆம் ஆண்டு புளோரிடா மாநிலத்தில் உள்ள டம்பா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்த டிரம்பின், அத்துமீறல் நடவடிக்கையில் நானும் பாதிக்கப் பட்டேன் என தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker