Latestஉலகம்

நிலம் எங்கே? 27 ஆண்டாகக் காத்திருக்குக் கம்போங் ஜாவா மக்கள்!

கோலாலம்பூர், பிப்.27- இங்கு சுங்கை பூலோவில் உள்ள கம்போங் ஜாவா என்ற குடியிருப்பு பகுதியில், 27 ஆண்டுகளுக்கு முன்னர் வசித்த குடியிருப்பு வாசிகளை, இரட்டை  ரயில் தண்டவாளத்  திட்டத்திற்காக, வீடுகளிலிருந்து வெளியேற்றிய மாநில அரசாங்கம், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப  மாற்று நிலம்  இதுவரை வழங்கவில்லை. 

அவ்விவகாரம் தொடர்பில், தற்போதைய மாநில அரசாங்கம் அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய நஷ்ட ஈட்டை வழங்க முயற்சிக்க வேண்டும் என்று அந்தக் குடியிருப்பு வாசிகளின் வழக்கறிஞர் கிறிஸ்டி சூசை நாதன் கேட்டுக் கொண்டதாக எப்.எம்.டி. செய்தி ஒன்று கூறுகிறது. 

அந்தப் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள், தங்களின் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று கடந்த 1990-ஆம் ஆண்டு, கே.டி.எம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. 

அந்தக் கிராம மக்கள், கே.டி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் குடியிருந்தனர். அங்கு குடியிருந்த 72 குடியிருப்புவாசிகள் மற்றும் குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து இரண்டு வாரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோம்பாக் நில அலுவலகத்தால் வலியுறுத்தப் பட்டனர். 

வெளியேற்றப்பட்ட அந்தக் குடியிருப்புவாசிகள், ரவாங் பகுதியில் உள்ள நீண்ட வீடுகளில் குடியிருக்க ஏற்பாடு செய்யப் பட்டது.  இரண்டு மாதங்களுக்கு பின்னர், அவர்கள் தங்களின் வீடுகளை காலி செய்தால், அவர்களுக்கு ரவாங் பகுதியில், வீடுகளை அமைக்க நிலம் வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது. 

அந்த அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் அவசர அவசரமாக ஒரே வாரத்தில் தங்களின் வீடுகளைக் காலி செய்தனர் என்று கிறிஸ்டி சொன்னார்.

“சிலர் ஒதுக்கப்பட்ட அந்த நீண்ட வீடுகளுக்கு குடிபெயர்ந்தனர். மேலும் சிலர், வாடகை வீடுகளில் தங்கினர். தங்களுக்கு சொந்த நிலம் வழங்கப் படும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தங்களின் வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு சென்றனர். 

“ஆனால், 1995-ஆம் ஆண்டு, அந்த மக்களுக்கு ஒதுக்கப் பட்டதாக கூறப்பட்ட நிலங்களில், தனியார் நிறுவனம் ஒன்று கட்டடங்களை அமைக்கவிருப்பதாக அந்தக் குடியிருப்பு வாசிகளிடம் கோம்பாக் நில அலுவலகம் தகவல் தெரிவித்தது.

அதன் பின்னர், ரிம.17,000 செலுத்தினால், மலிவு விலை வீடுகளை அம்மக்கள் வாங்கிக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறான போலீஸ் புகார்கள் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசாருக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப் பட்டன. 

ஆனால், அது குறித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. ஒப்பந்தங்கள் மீறப் பட்டது தொடர்பில் கொடுக்கப் பட்ட புகார்களுக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று கிரிஸ்டி சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker