Latestமலேசியா

மகாதீரை ஆதரிக்கிறதா பாஸ்? அது வெறும் பாவனையே..!

செமிஞ்சே, பிப். 27 –  பிரதமர் துன் மகாதீருக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பாஸ் கட்சி கூறி வந்திருந்தாலும், செமிஞ்சே இடைத்தேர்தலில் தனது ஆதரவாளர்கள் தேசிய முன்னணி வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டுமென மறைமுக உத்தரவை அது பிறப்பித்துள்ளது.

மலாய்-முஸ்லிகளின்  நலன்களை மகாதீர்தான் தற்காக்க முடியும் என பாஸ் கட்சி அவரை வானளாவப் புகழ்ந்தாலும், இன பாகுபாடு, ஐசெர்ட் இன பாகுபாடற்ற முன்னெடுப்பு, ஊராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் சீனப்பள்ளிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வுச் சான்றிதழ் போன்ற விவகாரங்களை மனதில் கொண்டு,  அதன் ஆதரவாளர்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பிரிபூமி பெர்சத்துவின் தலைவர்கள் ஒரு காலத்தில் அம்னோவிலிருந்து வந்திருந்தாலும், அது அம்னோவைப் போன்றே இன ரீதியான கொள்கைப் பிடிப்பைக் கொண்டிருந்தாலும், பாஸ் கட்சி  அம்னோவையே பெரிதும் ஆதரிக்கிறது.  பக்காத்தானிலிருந்து பெர்சத்து விலகினால் மட்டுமே,  தங்களின் ஆதரவு அதற்கு உண்டு என பாஸின் அடிமட்ட உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker