Latestஉலகம்

விமானி அபி நந்தனை நாளை பாக். விடுவிக்கும்! -இம்ரான்

இஸ்லாமாபாத், பிப்.28- இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையயான மோதல் கடுமையாகி வரும் நிலையில் நேற்று இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அதன் விமானியான அபி நந்தன் சிறைப் பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து நாளை அந்த விமானியை விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

அவரை நாங்கள் நாளை விடுவித்து விடுவோம் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்தார்.

எனினும், அவரது விடுவிக்க மறைமுகமாக பாகிஸ்தான் நிபந்தனையை விதிப்பதாக முன்பு தகவல் வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரோஷி பேசும் போது விமானியை விடுவித்த பின்னர், இருநாடுகளுக்கும் இடையிலான மோதலை இந்தியா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பதற்றம் அதிகரிப்பதால் யாருக்கும் பயனில்லை. அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக நாங்கள் விமானியை விடுதலை செய்ய முடிவெடுத்து உள்ளோம் என்று பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker