Latestமலேசியா

பத்து காஜாவில் பீதியை கிளப்பிய புயல் ! வீடுகள் சேதம்!

பத்துகாஜா, மார்ச். 1- பத்துகாஜாவில் நேற்று மாலையில் கடும் மழையுடன் சுழன்றடித்த புயலில் பல வீடுகள் சேதமடைந்தன.

மேலும் பல பகுதிகளில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. மரங்கள் விழுந்ததாலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டதாகவும் எனினும் உயிருடற்சேதம் எதுவுமில்லை என்றும் கூறப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் டேசா சங்காட் எனும் இடத்தில் உள்ள 5 வீடுகளின் கூரைகள் காற்றில் தூக்கி எறியப்பட்டன. புயலின் வேகம் கண்டு மக்கள் பீதியில் உறைந்து போயினர். நகரி மத்தியிலும் இந்தப் புயல் சேதங்களை ஏற்படுத்தின.

இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கிட உரிய நடவடிக்கையை பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் மேற்கொண்டார் .

இன்று காலையில் புயல் சேதங்களை சரி செய்யும் வகையில் மாவட்ட மன்ற ஊழியர்கள் துப்புரவு பணியை மேற்கொண்டனர். பத்துகாஜா மாவட்ட மன்ற உறுப்பினர்களான நித்தியானந்தன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker