Latestமலேசியா

வாங் கிலியான் புதைகுழி:  சர்ச்சைக்குரிய முன்னாள்  நீதிபதி தலைமையேற்பதா? –   சுரேந்திரன் கேள்வி

கோலாலம்பூர், மார்ச் 1- பெர்லிஸ், வாங் கிலியானில்  மியன்மார் அகதிகள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கோடூர சம்பவத்தை விசாரிக்க முன்னாள் தலைமை நீதிபதியான துன் அரிஃபின் ஸக்காரியா நியமிக்கப்பட்டதை சுதந்திர வழக்கறிஞர் அமைப்பைச் சேர்ந்த  என்.சுரேந்திரன் கடுமையாகச் சாடினார்.

2015இல் நடந்த அந்தச் சம்பவத்தை விசாரிக்க அரிஃபின் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினை உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் அறிவித்திருந்தார்

5 ஆண்டுகள் தலைமை நீதிபதியாக இருந்த அரிஃபின், பேரா மந்திரி பெசார் ஸம்ரி அப்துல் காதிர் வழக்கில் அவருக்கு ஆதரவாகவும், பேராசிரியர் அஸ்மி ஷாரோமின் தேச நிந்தனை வழக்கில் அவருக்கு எதிராகவும்,  அன்வாரின் ஓரினப் புணர்ச்சி வழக்கில் குற்றவாளியாக அறிவித்தவர்.

மேலும் கூட்டரசு நீதிபதிகளான டான்ஶ்ரீ  ராவுஸ் ஷாரிப் மற்றும் ஷுல்கிப்லி அகமட் மாக்கினுடின் ஆகியோர் பதவி ஓய்வு பெறுவதற்கு முன்னரே அவர்களின்  பதவிகளில்  நீட்டிக்க  அரசியலமைப்பு விதிகளுக்குப் புறம்பாக நடவடிக்கை எடுத்தது போன்றவற்றில் நீதியை நிலைநாட்டாமல் இருந்த காரணங்களினால் அவர்  கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக  சுரேந்திரன் குற்றம் சாட்டினார்.

ஆள்கடத்திலின் மூலம் கொண்டு வரப்பட்ட மியன்மார் அகதிகள் கொல்லப்பட்டு வான் கிலியானில் புதைக்கப்பட்ட சம்பவம் மிகக் கடுமையானது என்பதால், அந்த விசாரனணைக்கு அரிஃபின் தலைமையேற்பது கூடாது எனவும் சுரேந்திரன் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker